இலங்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்

எதிர்வரும் 9 ஆண்டுகளில் தெற்காசியாவிலேயே வயது முதிர்ந்தவர்களை அதிகம் கொண்ட நாடாக இலங்கை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஒவ்வொரு 5 நபர்களுக்கும் ஒருவர் 60 வயதைக் கடந்தவராக இருப்பார் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவர்களில் பெருமளவானோர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக, ஐக்கிய நாடுகளின் குடித்தொகை நிதியம், ஹெல்ப் எஜ் ஸ்ரீலங்கா அமைப்புடன் இணைந்து, பல நடவடிக்கைகளை மேற்கொள்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- Previous சருமத்தின் நிறத்தை அதிகரிக்க வேண்டுமா?
- Next கிளிநொச்சியில் பொறியியலாளர்கள் களமிறங்க காரணம் என்ன?
You may also like...
Sorry - Comments are closed