கிளிநொச்சியில் பொறியியலாளர்கள் களமிறங்க காரணம் என்ன?

கிளிநொச்சி கந்தன் குளத்தை பாதுகாக்க நீர் பாசன நிணைக்கள பொறியியலாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

நேற்று பிற்பகல் முதல் குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த கமநல சேவைகள் திணைக்களமும், இராணுவத்தினரும், பொதுமக்களும் பணியில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இந்த நிலையில் இன்று காலை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையமும், நீர் பாசன திணைக்களமும் குளத்தை பார்வையிட்டனர்.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்பாசன பணிப்பாளார் த.ராஜகோபு குறித்த நீர் கசிவை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவரது தலைமையில் நீர் கசிவை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் 10 மணியளவில் ஆரம்பமாக உள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: