வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்

லண்டன் வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்ணின் பெயர் மற்றும் அவரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

கிழக்கு லண்டனின் Walthamstowல் உள்ள வீட்டில் இளம்பெண்ணொருவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக பொலிசாருக்கு கடந்த 3ஆம் திகதி தகவல் வந்தது.

இதையடுத்து மருத்துவ குழுவினர் மற்றும் பொலிசார் அங்கு விரைந்தனர். அங்கு சுயநினைவின்றி கிடந்த Amani Iqbal (28) என்ற பெண்ணை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இந்த நிலையில் Amani Iqbalன் முதல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அவரின் பிரேத பரிசோதனையில் இந்தவொரு தெளிவான முடிவும் இன்னும் தெரியவில்லை.

 

அவரது மரணத்திற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். Amaniன் மரணம் தற்போது வரை விவரிக்கப்படாத மரணமாக கருதப்படுகிறது.

Amani இறப்பதற்கு முந்தைய நாட்களில் அவரை பார்த்து பேசியவர்கள் யாராவது இருந்தால் அவர்களுடன் பேச பொலிசார் விரும்புகிறார்கள்.

இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: