கடலோர பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி உருவாக வாய்ப்பு உள்ளதாக சிலி தேசிய அவசரகால மீட்பு அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்டார்டிகா கடலோர பகுதியில் உள்ள சிலி ராணுவ தளத்தில் உள்ளவர்களை மீட்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் ராணுவ தளம் பகுதியில் உள்ளவர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
- Previous இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்
- Next வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி இளைஞன் பலி
You may also like...
Sorry - Comments are closed