லண்டனில் வெப்பநிலை குறைவதால் பனிப்பொழிவு

இந்த வார இறுதியிலும், அடுத்த வாரத்திலும் லண்டனில் வெப்பநிலை குறைவதால் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை லண்டனில் பரவலான இடங்களில் பனிப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பின்வரும் இடங்களில் குறிப்பிட்ட நாட்களில் பனிப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ப்ரெண்ட் மற்றும் பார்னெட்
ப்ரெண்ட் மற்றும் பார்னெட் உள்ளிட்ட வட மேற்கு லண்டனின் பகுதிகளில், லேசான பனி மற்றும் மிதமான காற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
என்ஃபீல்ட் மற்றும் Haringey
என்ஃபீல்ட் மற்றும் Haringeyஉள்ளிட்ட வடக்கு லண்டனில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி முதல் இரவு 11 மணி வரையிலும் லேசான பனி மற்றும் மிதமான காற்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹெக்னி, பார்கிங் மற்றும் டாகென்ஹாம், மற்றும் நியூஹாம்
கிழக்கு லண்டனில், ஹெக்னி, பார்கிங் மற்றும் டாகென்ஹாம் மற்றும் நியூஹாம் உள்ளிட்ட இடங்களில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 11 மணி வரையிலும் லேசான பனி மற்றும் மென்மையான காற்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஹில்லிங்டன், ஈலிங் மற்றும் ஹாரோ
மேற்கு லண்டனில், ஹில்லிங்டன், ஈலிங் மற்றும் ஹாரோ உள்ளிட்ட பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 11 மணி வரையிலும் லேசான பனி மற்றும் மென்மையான காற்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ப்ரோம்லி, லம்பேத் மற்றும் லூயிஷாம்
ப்ரோம்லி, லம்பேத் மற்றும் லூயிஷாம் உள்ளிட்ட தெற்கு லண்டன் பகுதிகளில், ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் காலை 11 மணி வரையிலும், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 11 மணி வரையிலும் லேசான பனி மற்றும் மென்மையான காற்று இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
- Previous மன்னார் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முன் போராட்டம்
- Next யாழில் 41 பவுண் நகைகளை கொள்ளை அடித்த நபர் கைது
You may also like...
Sorry - Comments are closed