தமிழகத்தில் அகதி முகாமில் உள்ள இளைஞன் தற்கொலை

தமிழகத்தில் அகதி முகாமில் இலங்கை இளைஞர் ஒருவர் தனக்கு தானே தீயிட்ட தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த அணைக்கட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

27 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த 27ம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வாலாஜா அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர். பின்னர் மேலதின சிகிச்சைகளுக்காக அடுக்கம்பாறை அரச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலன் இன்றி குறித்த இளைஞர் நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் வாலாஜா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: