குழந்தையுடன் பெண் ஒருவர் குதித்து தற்கொலை

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, குழந்தையுடன் பெண் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள ஸ்ரீராம் நகர் பஸ்தி பகுதியிலேயே குறித்த சம்பவம் திங்களன்று இரவு நடந்துள்ளது.

இப்பகுதியில் பிமல் குமார் என்பவர் தமது மனைவி 22 வயது ஆர்த்தி மற்றும் 8 மாத குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

திங்களன்று இரவு சுமார் 11.30 மணியளவில் கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடு காரணமாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் மன அழுத்தத்தில் இருந்த ஆர்த்தி சட்டென்று படுக்கை அறையில் வைத்து கணவரை பூட்டியுள்ளார்.

பின்னர் இரண்டாவது மாடிக்கு சென்றவர், அங்கிருந்து 8 மாதமேயான தமது மகளுடன் குதித்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்க்க நேர்ந்த சிலர் உடனடியாக ஆர்த்தியின் கணவருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தொடர்ந்து அப்பகுதி மக்களே குழந்தையுடன் தாயாரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே, மருத்துவமனையில் சேர்ப்பித்த சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி ஆர்த்தி இறந்ததாகவும், குழந்தையின் நிலை இன்னும் ஆபத்து கட்டத்தை தாண்டவில்லை எனவும் மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்துள்ள பொலிசார், விசாரணையை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: