தங்கத்தின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அந்த வகையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 2.2 சதவீதம் சரிவடைந்துள்ளதாக சர்வதேச செய்திகளை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,790.33 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இதேவேளை கடந்த 30 நாட்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 4.56 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும், கடந்த மாதம் 27ஆம் திகதி இலங்கையில் 24 கரட் தங்கமானது (ஒரு பவுண்) 109,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் (ஒரு பவுண்) 99,900 ரூபாவாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: