ட்ரம்பின் 34 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்மாணித்த பாரிய கட்டடமொன்று வெடி வைத்து தகர்த்தப்பட்டுள்ளது.

நிவ் ஜர்சி கடலோர பகுதியிலுள்ள ட்ரம்ப் பிளாஸா மற்றும் கசினோ கட்டடமே ஆகியனவே இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைனமைட் வெடி மருந்து பயன்படுத்தி, இந்த கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளது.

34 மாடிகளை கொண்ட கட்டடம், நொடிப்பொழுதில் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1984ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிரம்ப் பிளாஸா கட்டடத்தின் ஊடாக, முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தனது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கட்டடம் 2014ம் ஆண்டுடன் மூடப்பட்ட நிலையில், இந்த கட்டடத்தை வேறொரு தரப்பிற்கு விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, கட்டடம் தகர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவி்க்கின்றன.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: