சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்துபவருக்கு கொரோனா

மன்னார் நகரில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்துபவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 291 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 426 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்கும் மட்டும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் மன்னார் நகரில் சிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவர்.
அதனால் அந்த சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு கடந்த சில நாள்களாக சென்றோர் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் அடையாளப்படுத்தப்படுகின்றனர்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறினார்.
- Previous ட்ரம்பின் 34 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்த்தப்பட்டுள்ளது.
- Next மர்மக் கும்பல் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீ முட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது
You may also like...
Sorry - Comments are closed