மர்மக் கும்பல் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீ முட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது

நவாலி அரசடியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீ முட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அந்தக் கும்பலைத் துரத்திச் சென்ற இளைஞர்கள், மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பலே இந்த அடாவடியில் ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை வெளிநாட்டிலிருந்து நடத்துபவர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டவரின் வீட்டுக்குள் புகுந்தே முச்சக்கர வண்டிக்கு தீவைக்கப்பட்டது என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து தாக்குதல் நடத்திய கும்பல் தப்பிச் சென்ற போது அந்தப் பகுதி இளைஞர்கள் துரத்திச் சென்றுள்ளனர். அதனால் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இளைஞர்களால் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: