ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

ஹட்டன், கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழுள்ள தலவாக்கலை சென்க்லெயார் தோட்டத்தின் டெவோன் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்றைய தினம் கிடைத்த PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கொட்டகல பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர ராகவன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளான குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் கடந்த 8ஆம் திகதி கம்பஹா பிரதேசத்திற்கு சென்றிருந்த போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக அவருடன் தொடர்புடைய குடும்ப உறுப்பினர்கள் 9 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய இன்று கிடைத்த முடிவுகளுக்கு அமைய 6 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

தொற்றுக்குள்ளான உறுப்பினர்களில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவி ஒருவரும் உள்ளடங்குவதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்குள்ளான குடும்ப உறுப்பினர் உட்பட 7 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: