திருகோணமலையில் வீதியால் சென்ற பெண் மீது கத்திக்குத்து

திருகோணமலை – கந்தளாய்ப் பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் குத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த தனது மனைவியை, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் வழி மறித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, வாய்த்தர்க்கத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர், திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து, தனது மனைவியைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதன்போது, அந்த வீதியால் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர், மீண்டும் திரும்பி சென்றுள்ளதைக் காணொளி மூலம் காண முடிந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பெண், திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: