இரண்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு – சின்னப் புல்லுமலை பகுதியில் பாம்பு தீண்டியதால் இரண்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரடியனாறு பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

மயக்க நிலையில் இருந்த குழந்தையை பெற்றோர் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதன்போது குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன் பின் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளங்கையில் பாம்பு தீண்டியிருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிசுவின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: