இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து செல்கின்றது

கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகளைக் கட்டுப்படுத்த முறையான திட்டம் தேவை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA ) செயலாளர் டாக்டர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார் தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரியில் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.

அனைத்து இறப்புகளிலும் எழுபது சதவீதம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தடுப்பூசி திட்டத்தில் இது தொடர்பில் கவனம் எடுக்கப்பட வேண்டும்.

ஜனவரி மாதம் முழுவதும் சுமார் 112 இறப்புகளைப் பதிவு செய்தோம். ஆனால் பெப்ரவரி மாதத்தில் இந்த 20 நாட்களில், ஜனவரி மாதத்தை விட அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆகவே கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகளைக் கட்டுப்படுத்த முறையான திட்டம் தேவை என்று டாக்டர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார் தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: