இலங்கைக்கு வருகைதர காத்திருக்கும் சீனர்கள்

6 மாதங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவர் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார்.
சீனாவில் இருந்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,
தற்போது சுற்றுலாத்துறை பாரிய பாதிப்புக்களை சந்தித்திருக்கின்றது. இந்நிலையில் சுற்றுலா துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
அந்த வகையில் வருடத்தின் இறுதி ஆண்டில் சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
அதற்கான ஏற்பாடுகள் தற்போது துரித கதியில் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கான விமான பயணங்களை ஏற்பாடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆறு மாத காலத்தில் சீனாவில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள். அதன் ஊடாக எமக்கு பாரியதொரு அந்நிய செலாவணி நாட்டுக்குள் வரும்.
இதனால் இவ்வாண்டின் இறுதி அரையாண்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலா பயணிகள் இலங்கை வருவார்கள் என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என்றார்.
- Previous இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து செல்கின்றது
- Next கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டது
You may also like...
Sorry - Comments are closed