சுரங்கத்தில் கோடிக்கணக்கான பணத்தை வைப்பதற்கு காரணம் என்ன?

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நிலக்கீழ் சுரங்கத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக்கணக்கான பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர்களினால் இந்த பணம் பதுக்கி வைப்பட்டிருக்கலாம் எனவும், நாளாந்தம் குறைந்தபட்சமாக மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம் இவ்வாறு பதுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்யும் பணத்தை வங்கிகளில் வைப்பிலிடும் கணக்குகளை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர்களால் வங்கிகளில் பணம் வைப்பிலிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது

இதற்கு முன்னர் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு பணம் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அண்மைய காலமாக அந்த நடவடிக்கையும் முடியாமல் போயுள்ளது.

நாட்டில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் இலட்சக்கணக்கில் உள்ளனர். அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 3 கிலோ கிராம் வரையான போதைப் பொருள் தேவைப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருளை வேறு முறையில் பைக்கற்றுகளில் அடைத்து சில்லறை கடைகளில் விற்பனை செய்வதற்கு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது. இதன்மூலம் கிடைக்கும் பணம் வேறு நபர்களின் பெயர்களில் வைப்பிலிப்படப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: