சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட பெண் உட்பட 16 இளைஞர்கள் சிக்கினர்

ஹபரணை பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் முகநூல் ஊடாக அழைப்பு விடுத்து விருந்து நடத்திய பெண் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருந்து தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தை நேற்று பொலிஸார் முற்றுகையிட்டு அவர்களை கைது செய்துள்ளனர். ஹபரணை குளக்கரையில் அமைந்துள்ள விடுதியில் இந்த முகநூல் விருந்து நடைபெற்றுள்ளது.
29 வயதான பெண்ணொருவரும், 22 முதல் 28 வயதான 16 இளைஞர்களும் இணைந்து இந்த விருந்தை நடத்தியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Previous சுரங்கத்தில் கோடிக்கணக்கான பணத்தை வைப்பதற்கு காரணம் என்ன?
- Next இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்
You may also like...
Sorry - Comments are closed