மெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவின் மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் லொறியொன்றில் சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் காரணமாக மேலும் ஒரு பெண்ணுக்கும் இளைஞருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜாலிஸ்கோவின், குவாதலஜாரா பகுதியில் உள்ள நகராட்சியான டோனாலாவில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 10 பேர் இறந்து கிடந்ததாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞரும், யுவதியும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இது தொடர்பான ஏனைய விபரங்களை உடனடியாக வெளியிடவில்லை.

ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவியேற்றார், வன்முறையை குறைப்பதாக உறுதியளித்தார். எனினும் மெக்ஸிகோவில் வெகுஜன படுகொலைகளும் பல்லாயிரக்கணக்கான படுகொலைகளும் தொடர்ந்தும் அரங்கேறிய வண்ணமே உள்ளது.

2020ஆம் ஆண்டு டிசம்பரில், முன்னாள் ஜலிஸ்கோ ஆளுநர் அரிஸ்டோடெல்ஸ் சாண்டோவால் கடற்கரை நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் உள்ள ஒரு உணவகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமையும் பிரதான விடயமாகும்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: