தனியார் நிறுவனத்தில் பணியாற்றுவோர் பணியிலிருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சம் நட்டஈடு

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்த நிறுவனத்தால் திடீரென வேலையில் இருந்து நீக்கப்பட்டால் ரூபா 25 இலட்சத்தை நட்டஈடாக ஊழியர்களுக்கு செலுத்த வேண்டும் என்ற புதிய சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த வர்த்தமானி அறிவித்தலை தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திர கீர்த்தி கடந்த 19ம் திகதி கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்.

2005ம் ஆண்டில் இறுதியாக இச்சட்டம் நிறுத்தப்பட்டு நட்ட ஈடாக 12 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர்கள் நிறுவனங்கள் பலவற்றினால் திடீரென நிறுத்தப்பட்டனர்.

 

இந்த நிலைமையை கவனத்திற் கொண்ட தொழில் திணைக்களம் மேற்படி 25 இலட்சம் ரூபா நட்ட ஈடு என்ற புதுசட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: