ஸ்ரீலங்காவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஸ்ரீலங்காவில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஒழிப்பு தொடர்பான விசேட செயலணியின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஸ்ரீலங்காவில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய ஸ்ரீலங்காவில் 5 லட்சத்து 92 ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்காவில் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றினால் 83 ஆயிரத்து 552 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 79 ஆயிரத்து 422 பேர் குணமடைந்துள்ளனர்.

அத்துடன் 476 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: