வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா இலுப்பையடி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்,

இலுப்பையடிப்பகுதியில் நின்றிருந்த முதியவர் வீதியை கடக்கமுற்பட்ட போது பூந்தோட்டம் பகுதியில் இருந்து வந்த மோட்டார்சைக்கிள் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் வீதியை கடக்கமுற்பட்ட முதியவர் படுகாயமடைந்த நிலையில் அங்கு நின்ற முச்சக்கரவண்டி சாரதிகளால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் வயது 56 என்ற முதியவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: