கொழும்பில் இளம் யுவதியின் சடலத்தை பயணப் பையில் கொண்டு நடமாடிய நபர் கைது

பயணப் பையொன்றில் இளம் பெண் ஒருவரின் சடலத்தை கொண்டு வந்து கொழும்பு – டாம் வீதியில் கைவிட்டு சென்ற சந்தேக நபர் குறித்து பொலிஸார் பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர் குறித்த தகவல்கள் தெரிந்தால், பொறுப்பதிகாரி – டாம் வீதி பொலிஸ் – 071-859 1557, பெலிஸ் அவசர பிரிவு இலக்கம் 0112-433 333 ஆகியவற்றுக்கு தகவல் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை – டாம் வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான பயணப் பெட்டியொன்று காணப்படுவது தொடர்பில் வர்த்தகர்கள் நேற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த பயணப் பெட்டியில் இருந்து தலையின்றி இளம் யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டனர்.

இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், அந்த பயணப் பொதியை நபர் ஒருவர் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த சடலம் ஹங்வெல பகுதியிலிருந்து பேருந்து ஒன்றில் கொண்டுவரப்பட்டமை தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்டவர் சுமார் 20 வயதுடையவர் என்று பொலிஸார் கூறியுள்ளனர், உயிரிழந்த பெண் யார் என்பது இதுவரையிலும் அடையாளம் காணப்படவில்லை.

இந்நிலையிலேயே, இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரையும் அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

இதேவேளை, தலை துண்டிக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி கொலை செய்யப்பட்டு இருந்த இளம் பெண் குருவிட்ட பகுதியில் வசித்தவராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிவனொளி பாத மலைக்கு யாத்திரை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது. இதையடுத்து பொலிஸார் குறித்த பெண்ணாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில் இளம் பெண்கள் காணாமல் போனது தொடர்பாக சில பொலிஸ் நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் குறித்தும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொஸ்கம, கிரிந்திவெல மற்றும் தென் மாகாணத்தில் இதுபோன்ற முறைப்பாடுகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: