இலங்கை இணையத்தளசேவையில் பின்தங்கிய நிலையில் உள்ளது

இணையத்தளசேவை வழங்கலில் இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VPN provider Surfshark நடத்திய இணைய சேவை தொடர்பான ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த பகுப்பாய்வு டிஜிட்டல் நாடுகளின் தர அட்டவணையின்படி கடந்த 2020 ஆம் ஆண்டு 85 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இதன்படி சிங்கப்பூர் சிறந்த இணைய தரமாக வழங்கப்பட்ட நாடாக மாறியுள்ளது, அதைத் தொடர்ந்து சுவீடன் மற்றும் நெதர்லாந்து ஆகியவை உள்ளன.

அறிக்கையின்படி, இலங்கை இ-உள்கட்டமைப்பு தொடர்பான 85 நாடுகளில் 83 ஆவது இடத்தையும் இலத்திரனியல் பாதுகாப்பில் 84 வது இடத்தையும், புரோட்பாண்ட் மற்றும் மொபைல் வேகத்தில் 76 வது இடத்தையும் பெற்றுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: