வெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தாயும் மகனும் தற்கொலை

தமிழகத்தில் குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற இளம்தாயாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.

குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (26). இவரும் கவிதா (25) என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஹரிகரன் (1) என்ற மகன் உள்ளான்.

இந்நிலையில் ராம்குமார் வெளிநாட்டுக்கு 4 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றார்.

இதனால் கவிதா, மாமியார் ராணி வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று காலை ராணி காய்கறி வாங்க சென்றார்.

பின்னர் 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் அறையில் கவிதா சேலையில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

 

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த ராணி அலறியபடி கவிதாவின் கால்களை பிடித்து அவரை மீட்க முயன்றார். ராணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் விரைந்து வந்து கவிதாவை மீட்டு கீழே இறக்கினர்.

பின்னர் குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததை கண்டும் அதிர்ந்தனர்.

இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தை ஹரிகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அதைகேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். கவிதாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கவிதா குழந்தையின் கழுத்தை துணியால் இறுக்கி கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

கவிதா மாமியாரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் இது தொடர்பிலான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: