சிலாபம் – புத்தளம் வீதியில் காருக்குள் இருந்து சடலம் மீட்பு

சிலாபம் பகுதியில் பல்பொருள் விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் – புத்தளம் வீதியில் அமைந்துள்ள பல்பொருள் விற்பனை நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கும் வாகன தரிப்பிடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த பகுதியில் சற்று பதற்றம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வாகன சாரதியின் இருக்கையில் உயிரிழந்த நிலையிலேயே குறித்த நபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
66 வயதுடைய கண்டி, அம்பிடிய, தம்வெலபார வீதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
- Previous பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது
- Next இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியக்கூறு உள்ளது
You may also like...
Sorry - Comments are closed