இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியக்கூறு உள்ளது

நாட்டின் பல பாகங்களில், இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில், 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் கடும் மழை பெய்யக்கூடும்.

இதேநேரம், காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக, பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில், அலையின் வேகம் சற்று அதிகமாக காணப்படும்.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், குறித்த கடல் பிராந்தியங்களில், மணிக்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில், காற்று வீசக்கூடும் என்றும், வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மழை பெய்யும் நேரங்களில் இடி மின்னல் ஆபத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: