இலங்கையில் முதன் முதலாக புதிய முறையில் தொழிலாளர் தின கொண்டாட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் அனைத்து நாடுகளிலும் இன்றைய தினம் கொண்டாடப்படுகின்றது.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று இனைத்து உலக நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. 18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே, மே தின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது.

இந்த மே தின உருவாக்கத்திற்காக பல நாடுகளிலும் பல தரப்பட்ட போராட்டங்கள் பணிப்புறக்கணிப்புக்கள் எனபனவும் இடம்பெற்றிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இம்முறை இலங்கையில் தொழிலாளர் தினம் வித்தியாசமான முறையில் கொண்டாடப்படுகின்றது. கொவிட்-19 பரவல் காரணமாக பிரதான அரசியல் கட்சிகள், இம்முறை தொழிலாளர் தின பேரணிகளை தவிர்த்துள்ளன.

இதேவேளை இலங்கையிலுள்ள பெரும்பாலான கட்சிகள் இணையத்தளத்தின் ஊடாக தொழிலாளர் தினத்தை இன்று கொண்டாடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில கட்சிகள், தங்களது தொழிலாளர் தின நிகழ்வினை இணையத்தளம் ஊடாக ஏற்பாடு செய்துள்ளன.

இதற்கிடையில் ஸ்ரீலங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி ஆகியன குறிப்பிட்டளவான தரப்பினருடன் ஒன்றிணைந்து, கமியூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தில் தொழிலாளர் தின நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: