மூன்றாவது அலையில் பரவும் உருமாறிய வைரஸ் திரிபு தொற்றினால் ஆரோக்கியமாக இருக்கும் நபருக்கு மரணம் ஏற்படக் கூடும்!

கோவிட் வைரஸின் மூன்றாவது அலையில் பரவும் உருமாறிய வைரஸ் திரிபு தொற்றினால் ஆரோக்கியமாக இருக்கும் நபருக்கு மரணம் ஏற்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கோவிட் வைரஸின் முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளில் மரணமானவர்கள் பல்வேறு வகையான நோய்களை கொண்டிருந்த நபர்கள் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட மருத்துவ நிபுணர் உபுல் திஸாநாயக்க கூறியுள்ளார்.

எனினும் இம்முறை எந்த நோய்களும் இல்லாத இளையவர்களுக்கு வைரஸ் தொற்றி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு உடனடியாக இறக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையில் நாள்தோறும் பதிவாகும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் நேற்றைய தினம் அதிகூடிய கோவிட் நோயாளர்கள் பதிவாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: