நாட்டில் மேலும் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலுக்கு!

நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதனடிப்படையில்,

மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு.பிலியந்தல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொன்னத்தர மற்றும் தெல்தர கிராம சேவகர் பிரிவுகள்.

எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல்லேகம, உடகம மற்றும் புதிய நகர் கிராம சேவகர் பிரிவு.

கம்பஹா மாவட்டத்தின் குட்டிவில கிராம சேவகர் பிரிவு.

இரத்தினபுரி மாவட்டத்தின் வலல்கொட, சுதுகல, ரத்கங்க மற்றும் பனமுர கிராம சேவகர் பிரிவுகள்.

வவுனியா மாவட்டத்தின் குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு.

மேற்குறிப்பிடப்பட்ட பிரதேங்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: