சாவகச்சேரியில் கொரோனா தீவிரம்: முழுமையாக முடக்கிய பிரதேசம் ஒன்று!

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும் நிலையில் குறித்த பிரதேசத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.

கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியானது வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றது. அந்த பகுதியில் இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே நேற்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளது.

கொடிகாமம் சந்தை, வர்த்தக நிலையங்களில் அதிகளவு கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, சந்தை, வர்த்தக நிலையங்களில் அதிகளவில் பணியாற்றுபவர்களை கொண்ட இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டுள்ளன.அந்த பகுதிகளிலுள்ள அனேகமான குடும்பங்களில் ஒருவரோ, பலரோ சந்தை, வர்த்தக நிலையத்துடன் தொடர்புபட்டவர்கள்.

அந்த பகுதியை முடக்கி, தொற்றாளர்கள் முழுமையாக அடையாளம் காணப்படா விட்டால் பெரிய கொத்தணியாக உருவாகும் அபாயமிருந்ததையடுத்து, அந்த பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது.இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் வெளியில் செல்வதற்கோ அல்லது வெளியில் உள்ளவர்கள் அந்தக் கிராமங்களுக்குச் செல்வதற்கோ அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பொலிசார் அறிவித்துள்ளனர்.

அந்த பகுதியிலுள்ள தொற்றாளர்கள், சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களிற்கு சென்று வந்தவர்கள் இன்றிலிருந்து அடையாளம் காணும் பணிகள் ஆரம்பிக்கப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: