‘அசுரன்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் கொரோனா தொற்றால் திடீர் மரணம்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில், தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

அதன்படி, தமிழ் சினிமா திரையுலகில் ஒவ்வொரு நாளும் ஒருவர் உயிரிழந்து வருகின்றனர்.தற்போது, 45 வயதான நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக் குழு, அசுரன், காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவரது மரணமும் தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: