தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது?

பாகிஸ்தானில் மொத்த மக்கள் தொகை 22 கோடி. அவர்களில் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினமும் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். ஆனால் பாகிஸ்தானில் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

தடுப்பூசியால் உடலில் வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. எனவே மக்களில் பலர் ஊசி போட முன்வரவில்லை. படித்தவர்களும், அரசு பணிகளில் இருப்பவர்களும் கூட ஊசி போட தயங்குகிறார்கள்.
இந்தநிலையில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வகை வைரஸ்கள் இப்போது பாகிஸ்தானிலும் பரவத் தொடங்கி உள்ளது. அது சிந்து மாகாணத்தில் அதிகமாக தாக்கி வருகிறது.

இந்தியாவில் ஏற்பட்டது போல இந்த வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் அலிஷா அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக நிதித்துறைக்கு அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: