சுத்துமாத்தில் மணியின் பெரும் ஆதாரம் சிக்கியது…..!

யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தனது சுத்துமாத்துக்களை அம்பலப்படுத்திய மாநகர சபை உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக சுத்துமாத்து பாணியில் மிரட்டல் பாணியில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் யாழ் மாநகர சபை முதல்வரின் திருகு தாளங்களை தனியார் தொலைக்காட்சியொன்றில் த.தே.கூட்டமைப்பின் சபை உறுப்பினர் ஒருவர் முழுமையாக வெளிப்படுத்திய நிலையில் அதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்திருந்திருந்தனர்.

அதில் முதல்வர் தனது சம்பளத்தினை பெறமாட்டேன் என பொதுவெளியில் தெரிவித்துவிட்டு அதற்கு மாறாக தனது சம்பளத்தினை தான் குறிப்பிட்ட இரு நபர்களின் வங்கி கணக்கிற்கு வைப்பிலிடும்படி சபையின் செயலாளருக்கு எழுதிய கடித ஆதாரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

அந்த கடிதத்தினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துகொண்ட சபையின் த.தே.மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு எதிராகவே மணிவண்ணன் விளக்கம் கோரியிருப்பதோடு தான் செய்தது தவறு என்பதை உணராது அந்த தவறு வெளிப்பட்டுவிட்டது என்ற கோபத்தில் அவரை சபை நடவடிக்கையிலிருந்து நிறுத்தப்போவதாகவும், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாகவும் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடந்த காலத்தில் அரசிடமிருந்து சலுகைகளைvபெற்ற கூட்டமைப்பு தொடர்பில் வெளிப்படுத்தியவர்களை சுமந்திரன் ஆயிரம் கோடி ரூபா வழக்குப்போடப்போவதாக மிரட்டியிருந்தார் இப்போது மணிவண்ணனும் தனது குற்றங்கள் வெளிப்பட்டவுடன் இவ்வாறு இலங்கை நீதித்துறையை காட்டி பொங்கி எழுந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து வெளியேற்றப்பட்ட மணிவண்ணன் ஈ.பி.டி.பி , ஐ.தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் கடந்த வருட இறுதியில் மேஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: