நித்தியானந்தா பாணியில் சிவசங்கர் பாபா; ஓடினார் சிக்கினார்!

இந்தியாவில் சாமியார்கள் சர்ச்சையில் சிக்குவது தொடர்கதையாக நீண்டுகொண்டுபோகின்றது. நித்யானந்தா எப்படி பாலியல் குற்றச்சாட்டிற்கு அஞ்சி ஹிமாச்சலில் தப்பிச் சென்ற போது கைது செய்யப்பட்டாரோ அதே போல் பாலியல் புகாருக்குள்ளான சிவசங்கர் பாபாவை காசியாபாத் அருகே பொலிஸார் துரத்தி சென்று பிடித்துள்ளனர்.

பிரேமானந்தா, நித்யானந்தா உள்ளிட்டோர் தனக்கென ஒரு பெண் பக்தர்கள் கூட்டத்தை வைத்துக் கொண்டு தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்ட சம்பவம் பட்டபரிவர்த்தனமாக தெரிந்தது. அந்த வரிசையில் மற்றொரு சாமியாரான சிவசங்கர் பாபா ஈடுபட்டுள்ளார். நித்யானந்தாவை போல சிவசங்கர் பாபாவும் வெளிமாநிலத்திற்கு தப்பி சென்ற போது அங்கு கைது செய்யப்பட்டார்.

முதலில் நித்யானந்தா, இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு மார்ச் 2ஆம் திகதி தமிழ் தொலைகாட்சி ஒன்றில் ஒரு வீடியோ படம் ஒளிபரப்பானது. அதில் நித்யானந்தாவும் தமிழ் நடிகையும் ஒருவரும் அந்தரங்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின. இதையடுத்து பொலிஸார் இவர் மீது வழக்குப் பதிவு செய்ததையடுத்து வழக்கை சந்திக்க விரும்பாத நித்யானந்தா தலைமறைவானார். அவரை பொலிஸார் தீவிரமாக தேடிவந்த நிலையில் அதே ஆண்டு ஏப்ரல் 21-ஆம் திகதி ஹிமாச்சல் பிரதேசத்தில் அர்கி என்ற இடத்தில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.

நிறைய ஆசிரமங்களை ஏற்படுத்தி அங்கெல்லாம் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாக புகார்கள் உள்ளன. இன்றும் அவர் மீதான புகாரில் கைது செய்ய பொலிஸார் தேடி வருகிறார்கள். ஆனால் அவரோ கைலாசா எனும் நாட்ட்டை உருவாக்கி அங்ருந்து கொண்டு உதார் விட்டு வருகிறார். இந்த நிலையில் நித்யானந்தாவை போலவே சிவசங்கர் பாபாவும் தன்னை கடவுள் எனக் கூறி கொண்டு தன் பள்ளியில் படிக்கும் பிஞ்சு மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு வந்ததாக புகார்கள் எழுந்தன.

இதனையடுத்து போக்சோ சட்டம் பாய்ந்ததை அடுத்து சென்னையைவிட்டு அவர் உத்தரகாண்ட் மாநிலம் சென்றார். அங்கு டேராடூனில் இருந்து மருத்துவமனையில் இருந்த பாபா, பொலிஸார் வருவதை அறிந்து தப்பியபோது உ.பி.- டெல்லி இடையே காசியாபாத் அருகே துரத்தி சென்று பிடிபட்டுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: