ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினம் இன்று!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்துமத பீடம் சார்பாக பிரதமரின் இந்துமத விவகாரங்களுக்கான இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் ‘இலங்கை வாழ் மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும், அனைத்து மதங்களும் போற்றப்பட வேண்டும் என்ற உயரிய கொள்கையும் சிந்தனையும் கொண்டவர்.

நாட்டின் வளர்ச்சிக்கான ஜனாதிபதியின் சேவைகளுக்கு இறைவன் அருள வேண்டுமென ஆசிகளையும் வாழ்த்துகளையும் இந்துமத பீடம் சார்பாக தெரிவித்துக்கொள்கின்றேன்’ எனத் தெரிவித்துள்ளார்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: