வியாழேந்திரனின் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் அடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர்…..!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரத்தின் இறுதி கிரியைகள் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று மாலை இடம்பெற்றது.

வியாழேந்திரனின் வீட்டின் முன்னால் நேற்று முன்தினம், மட்டக்களப்பு – சின்ன ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் நேற்று முன்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் வீட்டில் இல்லை என்றும் தனக்கும் படுகொலை செய்யப்பட்ட நபருக்கும் எவ்வித முன்பகையும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் அறிவித்திருந்தார்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: