யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருட மாரி மழை வீழ்ச்சி குறைவடைந்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த வேலணை ஊர்காவற்துறை காரைநகர் மருதங்கேணி மற்றும் கடற்கரையை அண்டிய பகுதியை சேர்ந்த 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து இருபதினாயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் வேதநாயகன் தெரிவித்தார்.
]
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதேச செயலகங்கள் மூலம்  பவுசர்கள் மூலம் குடி நீர் வழங்கப்படுவதாக தெரிவித்த அரச அதிபர் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் 6 புதிய பவுசர்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் எரிபொருள் மற்றும் சாரதிகளுக்குரிய நிதியும்  அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார்.

You may also like...

0 thoughts on “யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: