EMP – வடகொரியாவின் அதிரவைக்கும் போராயுதம்

EMP என்பது 30 கிமீ உயரத்தில் வெடிக்க வைக்கப்படும் (சத்தமின்றி வெடிக்கும்) ஒரு வகை அணு ஆயுதம். இது 30 கி.மீ உயரத்தில் வெடித்து அதன் கதிர்வீச்சு பூமியில் 600 கி.மீ. பரப்பளவுக்கு பரவி புவியிலிருக்கும் அனைத்து மின் இயக்கத்தையும் செயலிழக்கச் செய்யும். அதன் விளைவு புரிகிறதா? வீட்டில் உள்ள மின்சாதனங்கள் முதல் மருத்துவ மனையிலுள்ள மின் சாதனங்கள் வரை எதுவும் செயல்படாது. கணினிகள், மின்னணு சாதனங்கள், போர்த்தளவாடங்கள் எதுவுமே செயல்படாது. நகரமே இருளில் மூழ்கும். இதை சரி செய்ய பல நாள்கள் போராட வேண்டியிருக்கும். அதற்குள் அதன் விளைவு பல லட்சம் உயிர்களை பலிவாங்கும்.
EMP என்பது Electromagnetic Pulse என்ற ஆங்கில பதத்தின் சுருக்க எழுத்துக்கள். சில நாட்களுக்கு முன்பாக கிம் ஜான் உன், ‘நாங்கள் இன்னும் மூன்று வாரத்தில் அதிக ஆற்றல் படைத்த ஆயுதத்தைப் படைப்போம்’ என்று கூறியிருந்தான். அது இந்த EMP தான்.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் மேம்பட்ட சர்வதேச கல்வித்துறையைச் சேர்ந்த வில்லியம் ஆர். கிரஹாம் இதை விவரித்துள்ளார். வடகொரியா ஈ.எம்.பி. ஆயுதத்தை ஒரு குறுந்தொலைவு ஏவுகணை மூலமோ, ஒரு நீர்மூழ்கிப் படகு மூலமோ, அல்லது ஒரு விண்கோள் மூலமோ கூட அமெரிக்காவின் மீது ஏவித்தாக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்பை அமெரிக்கா தாங்காது என்று தெரிவித்தார். வடகொரியாவிடம் 10 முதல் 20 கிலோடன் அணு ஆயுதங்கள் இருப்பதால் அதனால் ஈ.எம்.பி. தாக்குதலை மேற்கொள்ள முடியுமாம்!
மேற்குலக ஊடகங்கள் கிம்மை வெறிபிடித்தவன், அரக்கன் என்றெல்லாம் வருணிக்கின்றன. வேறென்ன செய்ய முடியும் அவர்களால்? எதுவுமேயில்லாத ஈராக்கை, ஆஃப்கானிஸ்தானை வேட்டையாடிய ஓநாய்கள் இப்போது அச்சத்தில் ஊளையிடுகின்றன.

You may also like...

0 thoughts on “EMP – வடகொரியாவின் அதிரவைக்கும் போராயுதம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ads
%d bloggers like this: